நாக சைதன்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ்

நாக சைதன்யாவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ்

1 mins read
1409f486-2b38-4af1-8d4c-1d892c363085
படத்தில் கீர்த்தி சுரேஷ் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

மிகப்பெரிய வெற்றிப் படங்களான கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி, நாக சைதன்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இது மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் உருவாவதால் நாக சைதன்யாவும் இயக்குநரும் மீனவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று ஆய்வுசெய்து, அவர்களோடு பழகி தங்களைத் தயார் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் நாயகிக்கும் நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவப் பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ‘கஸ்டடி’ என்ற படம் வெளியாகி தோல்வி அடைந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்