ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ்,சைஃப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து வெளிந்த படம் ‘ஆதிபுருஷ்’. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த ஜுன் மாதம் 16ஆம் தேதி வெளியானது.
ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஓம் ராவத் அவரது விருப்பத்திற்கு ஏற்ப கதாபாத்திரங்களின் உருவங்களை மாற்றி, கதையை மாற்றி எடுத்திருந்தார்.
கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தாலும் ரூ.225 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.


