‘பரிசாக முத்தம் தருகிறேன்’

‘பரிசாக முத்தம் தருகிறேன்’

1 mins read
5dadd144-9787-4ce2-9c10-99fb5a902ae9
இயக்குநர் நெல்சன் - ஊடகம்

பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி ‘ஜெயிலர்’ படத்தின் இயக்குநர் நெல்சனை நேர்காணலில் சந்தித்தார். அப்போது அவரிடம் ‘‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை கொடுத்த உங்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக அளித்ததாக கேள்விப்பட்டேன். அது உண்மையா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த நெல்சன், “ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி கொடுக்கப்போகிறார்கள் என்று கலகலப்பாக பேசினார். மேலும் விலையுயர்ந்த கார் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்,” என்றார்.

“சரி அவர்கள் கொடுப்பது இருக்கட்டும். நீங்கள் என்ன கொடுக்கப்போகிறீர்கள்,’ என்று கேட்டதற்கு ‘உங்களுக்கு வேண்டுமானால் முத்தம் தருகிறேன். வாங்கிக்கொண்டு போங்கள்,” என்று கலகலப்பாக பேசினார் இயக்குநர் நெல்சன்.

விரைவில் இவருக்கு விலையுயர்ந்த கார் பரிசாக கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது. 

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி