தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில் பேசிய தங்கர் பச்சான், “சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பாளரைத் தேடி அலைய வேண்டி உள்ளது. அப்படியே கிடைத்தால் படத்தை வெளியிடுவது அதைவிட சிரமம். மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும்.
“பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. கண்முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணம் வந்தால் போதுமா. அறிவு வேண்டாமா? கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் கலைஞர்களைப் பார்த்து வளர்கிறார்கள்.
10 மசாலா படங்களை காட்டினால் குழந்தைகள் அழிந்தே போய்விடுவார்கள். நான் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன் வந்து பாருங்கள் என கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?’’ என ஆதங்கத்துடன் பேசினார்.
இவர் அண்மையில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து இருக்கும் ‘ஜெயிலர்’ படத்தைப் பற்றித்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

