இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்திய திரையுலகம்

1 mins read
a8290bea-dcd5-4eab-a2fc-2e1ee6c3b797
சந்திரயான் 3 - ஊடகம்

‘சந்திரயான் 3’ விண்கலம் மூலம் இந்தியா நிலவில் தடம் பதித்திருக்கும் நிலையில் திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இயக்குநர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில், “இதயம் பெருமையால் பூரிப்படைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிகிறது. ‘சந்திரயான் 3’ வெற்றிகரமான தரையிறக்கம் விண்வெளியில் புதிய சகாப்தம்” என பதிவிட்டுள்ளார்.

“கோடிக்கணக்கான இதயங்கள் இஸ்ரோவுக்கு நன்றி செலுத்துகின்றன. நீங்கள் எங்களை பெருமைபடுத்தியுள்ளீர்கள். இந்தியா வரலாறு படைப்பதை பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நிலவில் இந்தியா. நாம் நிலவில் இருக்கிறோம்” என்று நடிகர் அக்ஷய்குமார் பதிவிட்டுள்ளார்.

“இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. என் இதயம் பெருமையால் ததும்புகிறது,” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுக்கு மிக முக்கியமான சாதனை. இன்று வரலாறு படைக்கப்பட்டது,” என சிரஞ்சீவி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியர்கள் பெருமைகொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நட்சத்திரம், நிலவுக்கு அப்பால் உயரத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த தருணமிது,” என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சிம்பு.

இவர்களைப்போல பல நடிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி