ஆறு விருதுகளை அள்ளிய ‘ஆர்ஆர்ஆர்’

ஆறு விருதுகளை அள்ளிய ‘ஆர்ஆர்ஆர்’

1 mins read
6ae01627-50a1-4a19-9cbe-1431b1886bc2
‘ஆர்ஆர்ஆர்’ பட நாயகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ராஜமௌலி. - படம்: ஊடகம்

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்த்தபடி ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஆறு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ அனைத்துலக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது.

இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட நிலையில், அக்காட்சிகளை அமைத்த சண்டைப் பயிற்சியாளர் கிங் சாலமனுக்கு விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை பிரேம் ரக்‌ஷித் என்பவர் பெற்றுள்ளார். சிறந்த தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கான (Special Effects) தேசிய விருது சீனிவாஸ் மோகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதை வென்றுள்ள கீரவாணி சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு பெற்றுள்ளார். சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் ‘ஆர்ஆர்ஆர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பாடகருக்கான விருதை கால பைரவா பெற்றுள்ளார்.

தேசிய விருதுகளை மொத்தமாக அள்ளியது மகிழ்ச்சி அளிப்பதாக ‘ஆர்ஆர்ஆர்’ படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்