நிதி: பொறுமையால் கிடைத்த வாய்ப்பு
பொறுமையாக இருந்தால் பெரிய வாய்ப்பு தேடி வரும் என்ற நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிறார் நிதி.
‘பாகுபலி’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் தமக்கான வாய்ப்புகள் தேடி வரும் என்கிறாராம் நிதி.
இயக்குநர் மாருதி இயக்கத்தில் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நிதி அகர்வால் இக்குழுவுடன் இணைந்துள்ளார்.
இத்தகவலை இயக்குநர் மாருதி சமூக ஊடகப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழில் சிம்பு, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் அமையவில்லை.
இந்நிலையில் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரட்டை வேடங்களில் விஜய்
‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்த படத்துக்கான வேலைகளை விரைவில் தொடங்க உள்ளார்.
இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் அந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு இது 68வது படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்யை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க உள்ளார் வெங்கட்பிரபு. எனினும் கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இரட்டை வேடங்களில் ஒன்று கதாநாயகன், மற்றொரு பாத்திரம் வில்லன், அப்பா, மகன் என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்தால்தான் எதுவும் உறுதியாகும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார்.
இதில் நித்யா நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது ‘இறைவன்’, ‘சைரன்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு ‘சீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா அதன் பிறகு ‘காளி’ என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணையத் தொடர் ஒன்றும் இவரது இயக்கத்தில் உருவானது.
இந்நிலையில், இவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் தயக்கமின்றி நடிக்கச் சம்மதித்துள்ளாராம் ஜெயம் ரவி.

