ரூ.6 கோடி ஊதியம் கேட்கும் அனுஷ்கா

ரூ.6 கோடி ஊதியம் கேட்கும் அனுஷ்கா

1 mins read
a147523b-a04a-4ce2-afb5-3020c2380fa3
அனுஷ்கா. - படம்: ஊடகம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் அனுஷ்கா. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ள போதிலும், அவர் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை கவலைப்பட வைத்துள்ளது.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து இருக்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த மாதம் இப்படம் திரைகாண உள்ளது. இந்நிலையில் மேலும் சில பட வாய்ப்புகள் அனுஷ்காவைத் தேடிவந்துள்ளன. இந்த நிலையில் தனது சம்பளத்தை திடீரென்று ரூ.6 கோடியாக உயர்த்தி உள்ளாராம் அனுஷ்கா.

தெலுங்கு இணையத்தளங்களில் இத்தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ரூ.3 கோடி மட்டுமே ஊதியம் பெற்று வந்த அவர், திடீரென அதை இருமடங்காக உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் அதிர வைத்துள்ளது.

“குறைந்தபட்சம் அவர் இப்போது நடித்து முடித்துள்ள படம் வெளியாகும் வரை பொறுமை காத்திருக்கலாம். அந்தப் படம் வெற்றிபெறும் பட்சத்தில் ஊதியத்தை அவர் உயர்த்தி இருந்தால் யாரும் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்,” என்று திரையுலக விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.

ஆனால் அனுஷ்கா தரப்போ, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ படம் நிச்சயம் வெற்றிபெறும் என உறுதியாகச் சொல்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்