சவாலான வேடங்களை விரும்பும் தமன்னா

1 mins read
4f7e8c5d-33e1-4e02-8fd9-23daeea0b04c
தமன்னா. - படம்: ஊடகம்

‘ஆன்யா’ என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் தமன்னா.

மர்ம மரணங்களைப் பற்றி விசாரித்து, உண்மையை வெளிக்கொண்டு வரும் விசாரணை அதிகாரியாக நடித்தது மாறுபட்ட அனுபவங்களைத் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற கதாபாத்திரங்கள் சவாலானவை. எனினும், இத்தகைய சவால்களை நான் மிகவும் விரும்புகிறேன். திரையுலகில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட பின்னர், ஓர் அனுபவ நடிகையாக இதுபோன்ற கதாபாத்திரங்களை துணிந்து ஏற்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்கிறார் தமன்னா.

பெண்கள் வலிமை மிக்கவர்களாக வலம்வர வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்