விஜய்யின் 68வது படத்தில் அவரது தோற்றம் மிகவும் மாறுபட்டதாக, ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அப்படத்தை இயக்கும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் ஆகிய மூவரும் விரைவில் அமெரிக்கா பறக்க உள்ளனர்.
அங்கு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த நிறுவனம் ‘3டி விஎப்எக்ஸ் ஸ்கேன்’ எனும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் தோற்றத்தை வடிவமைக்க உள்ளதாகத் தகவல்.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஃபேன்’, கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
‘விஜய் 68’ படத்தில் மாதவன், பிரபுதேவா, ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு மெட்டமைக்கும் பணியும் அமெரிக்காவில் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.