‘விடாமுயற்சி’ படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை அதன் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மறுத்துள்ளார்.
அப்படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்க இருப்பதை அவரது தரப்பும் உறுதி செய்துள்ளது.