ஐஸ்வர்யா லட்சுமி எண்ணிக்கை எனது இலக்கு அல்ல

1 mins read
19606c63-0974-4b01-89d1-bef5b4bfd004
ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: ஊடகம்

அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது தமது இலக்கல்ல என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

இனி தரமான படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்தான் தமது கவனம் உள்ளது என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சவாலான, இதுவரை நான் நடித்திராத வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல பாத்திரம் என்றால் சிறிய வேடத்திலும் நடிப்பேன்.

“‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நான் நடித்த பூங்குழலி பாத்திரம் எனக்கு மிகுந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது. இது நான் எதிர்பாராதது. இந்தப் படம் எனக்குப் பல கதவுகளைத் திறந்துள்ளது. வாய்ப்புகள் மட்டுமல்லாமல், மக்கள் மனதிலும் சிறந்த இடம் கிடைத்திருக்கிறது,” என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்