வடிவேலு நடித்த திரைப்படக் காட்சிகளைப் பார்த்துதான் தமிழில் பேச கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார் நடிகை சிருஷ்டி டாங்கே.
தாம் வடிவேலுவின் தீவிர ரசிகை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வடிவேலு எந்த விஷயத்தையும் மிக எளிமையாக, ஜாலியாக சொல்வார். என்னை ‘ச்சுருதீதீ’ என்று தான் அழைப்பார்.
“முதன்முதலாகப் பார்த்தபோது எனக்குத் தமிழ் தெரியாது என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் அவரது படங்களைப் பார்த்து தமிழ் பேச கற்றுக்கொண்டதாகச் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்,” என்கிறார் சிருஷ்டி டாங்கே.
தற்போது, ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிருஷ்டி நடித்துள்ளார். படத்தின் முதல் பாதியில் இவரது காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.
‘சந்திரமுகி 2’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்றும் சிருஷ்டி கூறியுள்ளார்.


