குழந்தைகளின் கல்விக்கு ஏற்படும் தடைகள் அனைத்தையும் உடைக்க வேண்டும் என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு அளிப்பது வரவேற்க வேண்டிய திட்டம் என்று தாம் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்த முன்னெடுப்பு,” என்கிறார் வரலட்சுமி.
இவர் தற்போது தமிழைவிட தெலுங்குப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைகின்றனவாம்.