தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகளுடன் அஜித் மேற்கொண்ட மிதிவண்டிப் பயணம்

1 mins read
d98f490c-69d6-45c8-83ce-b612de58032b
குழந்தைகளுடன் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்ட அஜித். - படம்: ஊடகம்

ஓய்வு கிடைத்தால் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறார் அஜித். இல்லையெனில் வெளிநாடுகளில் ‘பைக்’ பயணம் மேற்கொள்வார்.

சென்னையில் குழந்தைகள் சிலருடன் அஜித் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் படங்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸும் அணிந்தபடி அஜித் சைக்கிளில் செல்ல குழந்தைகள் சிலர் சைக்கிள்களில் அவரைப் பின் தொடர்கின்றனர்.

அஜித் மனைவி ஷாலினி, அவர்களுடைய குழந்தைகளான அனோஷ்கா, ஆத்விக் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

சிறார்களில் சிலர் ஒருவரையொருவர் வேகமாக முந்திச் செல்ல முயன்றபோது மெது வாகச் செல்லுமாறு அறிவுறுத்தினார் அஜித்.

மேலும், அவ்வப்போது சைகை மூலமாகவும் அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

இந்தக் காணொளியில் அவர் வழக்கத்தைவிட உற்சாகமாகக் காணப்பட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்