சீதை வேடத்தில் நடிக்க தயாராகும் சாய் பல்லவி

1 mins read
28f542d6-9043-4d4f-8a40-0f070e141959
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராமாயணக் கதை ஏற் கெனவே பல்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘ராமராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.

இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ தெலுங்குப் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

இந்நிலையில், முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகும் புதுப்படத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடிக்க உள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார்.

இதில் சீதையாக நடிகை ஆலியா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகிவிட்ட நிலையில், சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

சீதை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் சாய் பல்லவி.

இப்போதும் அதே ஆர்வத்துடன் இருப்பதால் அவர் சீதையாக நடிப்பது உறுதியாகி உள்ளது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்