வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய்யின் 68வது படம் உருவாக உள்ளது.
‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறிது ஓய்விற்குப் பிறகு தற்போது தமது 68வது படத்திற்கான வேலைகளில் விஜய்யும் இறங்கிவிட்டார்.
இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.
அதற்கான ‘தோற்றத் தேர்வு’ செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார்கள்.
அங்கு ஹாலிவுட் கலைஞர்கள் விஜய்யின் தோற்றத் தேர்வு நடத்த உள்ளார்களாம்.
லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்தில் விஜய் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
விஜய்யின் 68ஆவது படத்தை பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான படமாகவும் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் பிரபுதேவா, மாதவன், ஜெய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாகவும், அப்பாவுக்கு மகனுக்கும் இடையிலான மோதல் தான் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் இசை விழா சென்னையில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அந்த விழாவில் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் லியோ படத்திற்காக 17 பின்னணி இசையை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் ஆங்காங்கே முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளின் பின்னணியில் அந்த இசை ஒலிக்கும் என்று கூறும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது வெளியான ‘பிளடி ஸ்வீட்’ காணொளியில் உள்ள காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெறுவதாகக் கூறினார்.
படம் பார்க்கும்போது ரசிகர்களால் அந்தக் காட்சிகளையும், உணர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது லியோ படத்தின் கதை குறித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இப்படத்தின் கதைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான மாறுபட்ட கதையில் லியோ படம் உருவாகி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் லியோ படத்தில் தான் அவரது நடிப்பு உச்சமாக இருக்கும். குறிப்பாக இதன் இடைவேளைக்கு முந்தைய 8 நிமிட காட்சிகள் மிக வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
லியோ படத்தின் நுழைவுச்சீட்டு முன்பதிவு குறித்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.
லியோ படம் அக்டோபர் 19ல் திரைக்கு வரும் நிலையில், 6 வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 7ம் தேதியிலிருந்து லண்டனில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் டத்தின் நுழைவுச்சீட்டு முன்பதிவு குறித்த தகவல்கள் ஏதும் தெளிவாக வெளிவரவில்லை.