கல்லூரியில் படித்தபோது முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தம்மிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
அச்சமயம் கல்லூரித் தோழியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினாராம். அப்போது அதே ஆட்டோவில் ஏறிய ஆடவர் ஐஸ்வர்யாவுக்கு அருகே அமர்ந்துள்ளார்.
“ஒரே ஆட்டோவில் பலர் செல்லக்கூடிய நடைமுறை இன்றும் சென்னையில் உள்ளது. அந்த ஆடவர் ஒரு கட்டத்தில் என் மீது கை வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அத்துமீறத் தொடங்கியதும், நான் உடனடியாகக் கூச்சலிட்டு ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன்.
“இதுபோன்ற மோசமான ஆள்களை ஏன் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என சத்தம் போட்டேன். அதற்கு பிறகு அந்த ஆட்டோவின் ஓட்டுநர் அந்த ஆடவரை திட்டி வண்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டார். பெண்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்,” என அண்மைய பேட்டியில் அறிவுறுத்தி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

