கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் உலகம் முழுவதும் பொழுதுபோக்குத் துறை முற்றிலும் மாறிவிட்டது என்றும் சிறந்த கதைகளைப் படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார் நடிகை ஹூமா குரேஷி.
நல்ல கதைகளை மட்டுமே தாம் தேடுவதாகவும் முன்னணி நடிகர்களை நாடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிற மொழிகளில் இருந்து அருமையான கதைகளில் நடிக்க எனக்கு அழைப்புகள் வருகின்றன. இத்தகைய நிலை மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன.
“எனவே, ‘சூப்பர் ஸ்டார்’களை தேடிச் செல்லாமல், ‘சூப்பர் கதை’களை மட்டுமே தேடிச் செல்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள்ள என அனைவருக்குமே இது உற்சாகமான காலம்,” என்கிறார் ஹூமா குரேஷி.


