தமது முதல் காதல் அனுபவம் சில நாள்கள்கூட நீடிக்கவில்லை என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
போதுமான முதிர்ச்சி இல்லாததே இதற்குக் காரணம் என்றும் காதல் வயப்பட்ட இருவருமே ஒருவித குழப்பத்தில் இருந்ததாகவும் ஒரு பேட்டியில் அவர் மனம்திறந்து குறிப்பிட்டுள்ளார்.
“காதலில் இருவருமே நேர்மையாக இல்லை. நாள்தோறும் சில பொய்களைச் சொல்லியே அந்த உறவை நீடித்துக்கொண்டு இருந்தோம்.
“அந்தச் சமயத்தில்தான் எனது பெற்றோரும் படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி கடுமையாக எச்சரித்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்தது.
“அதனால் அந்த முதல் காதலை முறித்துக்கொண்டேன். எனினும் இந்த முடிவுக்காக நான் இதுவரை வருத்தப்பட்டது இல்லை,” என்று ஜான்வி கபூர் மேலும் கூறியுள்ளார்.
ஆனால் எந்த வயதில் அவர் காதல் வயப்பட்டார், யார் அந்தக் காதலர் என்பதை எல்லாம் அவர் பகிரவில்லை.

