யோகி பாபு: என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்

யோகி பாபு: என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்

1 mins read
72c097c7-dd58-4f08-97ce-e69c16d90a62
யோகி பாபு. - படம்: ஊடகம்

படப்பிடிப்பில் பங்கேற்காமல் தயாரிப்பாளரையும் இயக்குநரையும் தாம் நோகடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்கிறார் யோகி பாபு.

ஒருசிலர் செய்த தவறுகளைத் தட்டிக் கேட்டதால் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு முன்பு சில படங்களில் நான்கைந்து காட்சிகள் மட்டுமே நடித்திருந்தேன். ஆனால் சுவரொட்டிகளில் என் படத்தை பெரிதாக வைத்து விளம்பரம் செய்தனர்.

“இது ரசிகர்களையும் பட விநியோகிப்பாளர்களையும் ஏமாற்றுவதுபோல் ஆகாதா என்று கேள்வி கேட்டேன். நான் அப்படிக் கேட்டது பிரச்சினை. இதனால் என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்.

“நான் கதை கேட்டு நடிப்பதைவிட ஒருசிலரது நிலையைக் கண்டு வருத்தப்பட்டுதான் நடிக்கிறேன். இப்போது நடித்துள்ள ‘லக்கி மேன்’ படம் எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதுபோல் உள்ளது,” என விளக்கம் அளித்துள்ளார் யோகி பாபு.

குறிப்புச் சொற்கள்