தென்னிந்திய மொழிகளில் நயன்தாராவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
அவர்முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டகிராமில் இணைந்துள்ளார்.
அவர் இணைந்த சில மணி நேரத்திலேயே அவரது கணக்கை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர்.
தற்போது 1.5 மில்லியனுக்கு மேலான ரசிகர்கள் நயன்தாரா இன்ஸ்டகிராம் கணக்கைப் பின்தொடர்கின்றனர்.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக நயன்தாரா அவரது மகன்களுடன் நிற்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றினார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடல் வரிகளுடன் ‘நான் வந்துட்டேன்னு சொல்லு..’ என இரு மகன்களுடன் ஒரு காணொளியையும் பதிவிட்டார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். மேலும், குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் தவிர்த்து வந்தனர்.