அஜித்தின் புதிய படமான விடாமுயற்சி லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், இப்படம் கைவிடப்படுவதாக சினிமா வட்டாரங்களில் பேசிவந்தனர்.
இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்பதால் இனி தாமதமாகாது என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சய் தத் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த கேஜிஎஃப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, லியோ படத்தில் நடித்துள்ளார். தற்போது, அஜித்துடன் இணையும் தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘விடாமுயற்சி’ படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்க இருப்பதை அவரது தரப்பும் கூறியுள்ளது.

