‘கேப்டன் மில்லர்’ படத்தில் அதன் நாயகி பிரியங்கா அருள் மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாகப் படமாக்கி முடித்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
இதில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
“எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக ஊட்டியில் நடைபெற்றது.
“அப்போது எனது கதாபாத்திரத்துக்கான காட்சிகளைப் படமாக்கி முடித்தனர். இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தது மனநிறைவு தருகிறது. படத்தின் வெளியீட்டை சராசரி ரசிகர்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

