‘சைந்தவ்’ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் ஆர்யா

‘சைந்தவ்’ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் ஆர்யா

படம்: ஊடகம்

02 Sep 2023 - 1:11 pm

1 mins read

‘சைந்தவ்’ என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் ஆர்யா.

நீண்ட தலைமுடி, தாடியுடன் அவர் மிடுக்காக நடந்து வரும் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் கையில் துப்பாக்கி ஒன்றை ஏந்தி மிரட்டவும் செய்கிறார்.

சமூக ஊடகங்களில் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா என இரு நாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும், வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், சாரா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சைலேஷ் கொலானு இயக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியிட உள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்