தமன்னா வெளியிட்ட காணொளி

1 mins read
90b1049b-f078-4f4a-9037-fe5e9692933d
தமன்னா. - படம்: ஊடகம்

திரையுலகில் 18 ஆண்டு காலம் பயணம் மேற்கொண்டதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது என்கிறார் தமன்னா.

இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தப் பயணத்தின்போது பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பக்கத்து வீட்டுப் பெண், துன்பத்தில் வாடும் பெண், பயமின்றி புலனாய்வு செய்யும் பெண் என்று பலவிதமாக நடித்து அருமையான பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

“பழைய சம்பவங்களை நினைவுகூற சிறிதளவு நேரம் கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தின்போது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்