மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியையாகப் பணியாற்ற விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை கியாரா அத்வானி.
இந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் இவர், திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, பாலர் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சிறார்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றுவதை மிகவும் விரும்புவதாகவும் ஆசிரியையாகப் பணியாற்றியதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்றும் ஒரு பேட்டியில் கியாரா குறிப்பிட்டுள்ளார்.
“ஏனெனில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது பயனுள்ள செயல். மேலும் அவ்வாறு நேரத்தைச் செலவிடுவது மிக அழகான தருணமாகவும் அமைந்துவிடுகிறது,” என்கிறார் கியாரா அத்வானி.

