‘லியோ’வில் நடிக்காதது குறித்து விஷால் விளக்கம்

‘லியோ’வில் நடிக்காதது குறித்து விஷால் விளக்கம்

2 mins read
bd37c02d-8eaa-4e19-bf2c-38b4467e2a2d
விஷாலுடன் அபிநயா. - படம்: ஊடகம்

விஜய்யின் ‘லியோ’ படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷால்.

ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடியாமல் போனது பற்றி அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இயக்குநர் லோகேஷ் ‘லியோ’ படத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டு என்னை அணுகியது உண்மைதான். மொத்தம் நான்கு மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“அச்சமயம் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரே சமயத்தில் என்னால் இரண்டு படங்களுக்கும் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் ‘லியோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கைவிட்டேன்,” என்று விஷால் கூறியுள்ளார்.

தனது நிலை குறித்து விஜய்யிடம் தெரிவித்துவிட்டேன் என்றும் வாய்ப்பு அமையும்போது விஜய்யை வைத்து தாம் படம் இயக்கப்போவது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகை அபி நயாவை விஷால் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி எனத் தெரிகிறது.

‘மார்க் ஆண்டனி’ படத்தில் தாம் விஷாலின் மனைவியாக நடித்துள்ளதாகவும் அதை வைத்து சிலர் வதந்தி பரப்பிவிட்டதாகவும் அபிநயா கூறியுள்ளார்.

“நான் விஷாலின் தீவிர ரசிகை. அவரைச் சந்திக்க வேண்டும், இணைந்து நடிக்க வேண்டும் என்பது என கனவாக இருந்தது. திரையுலகில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்கிறார் அபிநயா.

தொடர்புடைய செய்திகள்

சிறு வயதில் ரஜினி ரசிகையாக இருந்ததாகவும் விஷாலின் முதல் படமான, ‘பிரேம சதுரங்கம்’ பார்த்த பிறகு அவரது ரசிகையாக மாறிவிட்டதாகவும் அபிநயா மேலும் தெரிவித்துள்ளார்.

“விஷாலுக்கு அடிக்கடி கோபம் வரும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவர் அதற்கு நேர்மாறாக உள்ளார். அனை வரிடமும் அன்பு பாராட்டுகிறார்,” என்கிறார் அபிநயா.

குறிப்புச் சொற்கள்