இன்ஸ்டகிராமில் இணைந்துள்ள நயன்தாராவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.
தனது இரு குழந்தைகளுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை முதல் பதிவாக இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் நயன்தாரா.
இன்ஸ்டகிராமில் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மிக அதிகமானோர் பின்தொடர்ந்த நடிகை என்ற பெருமையை கேத்ரினா கைஃப் பெற்றிருந்தார். தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் நயன்தாரா.
அதற்கு நேர்மாறாக கணவர் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.