பிரபல நடிகர் ஆர்.எஸ். சிவாஜி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66.
இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரரான சிவாஜி, பல்வேறு தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘குணா’, ‘வியட்நாம் காலனி’, ‘அன்பே சிவம்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஆர். எஸ்.சிவாஜி.
நடிகராக மட்டும் இன்றி துணை இயக்குநர், ஒலிப்பதிவு நிபுணர் எனப் பன்முகத் திறமையோடு விளங்கியவர் ஆர்.எஸ்.சிவாஜி.
அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


