பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்தப் படம் தயாரிக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
இதற்கு ‘கிங்ஸ்டன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பதுடன், நாயகனாகவும் நடிக்க உள்ளார் ஜிவி.
கடந்த 2013ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘மதயானைக் கூட்டம்’ என்ற படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரித்திருந்தார்.
கதிர், ஓவியா நடித்த அந்தப் படம் ஐந்து கோடி ரூபாய் செலவில் உருவாகி 15 கோடி ரூபாய் வசூல் கண்டது.
இந்நிலையில், தனது 25வது படத்தை தாமே தயாரித்து நடிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளார். இப்படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியீடு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.