தேவாவைத் தேடி வந்த வில்லன் கதாபாத்திரம்

1 mins read
7d5b2f8c-fb0c-401f-922b-c0057c9130a2
தேவா. - படம்: ஊடகம்

தனுஷின் ஐம்பதாவது படத்தில் தன்னை வில்லனாக நடிக்கக் கேட்டு அப்படக்குழுவினர் அணுகியதாக இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

இதனால் ஆச்சரியம் அடைந்த தேவா, நேரடியாக தனுஷைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

“எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க அழைத்தீர்கள் என்று கேட்டபோது, உங்களைப் போல் ‘வடசென்னை’ தமிழில் தெளிவாகப் பேசுவதற்கு யாரும் கிடைக்கவில்லை என்று தனுஷ் விளக்கம் கொடுத்தார்.

“என்னால் பாடல்களைக்கூட குறிப்புகளின்றிப் பாட முடியாது. எனவே, நீங்கள் கொடுக்கும் நீளமான வசனங்களை நினைவில் வைத்திருந்து கோவையாகப் பேச முடியாது.

“என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதை விரும்பவில்லை என்று கூறி, வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்,” என்று தேவா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்