சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்தது எனக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிவா. இதையடுத்து, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலும் நடைபெற உள்ளது.
மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகிறது ‘கங்குவா’. இதில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார்.
மேலும், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சூர்யா இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

