எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி

1 mins read
0850b9b3-5474-425a-8269-c605ed047ef6
கார்த்தி. - படம்: ஊடகம்

‘ஜப்பான்’ படத்தில் கார்த்தி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டனர். இதனால் அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார் கார்த்தி.

இந்தப் படத்துக்கு ‘ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ‘வா வாத்தியாரே’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்று சூட்டப்படும் எனத் தெரிகிறது.

காரணம், கதைப்படி இதில் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறாராம் கார்த்தி.

பல்வேறு வெற்றிப் படங்களில் எம்.ஜி.ஆர் ஏற்றிருந்த வேடங்களுக்கான தோற்றத்தில் கார்த்தியும் திரையில் தோன்றுவார். இப்படத்தை தற்காலிகமாக ‘கார்த்தி 26’ எனக் குறிப்பிடுகிறார்கள். சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

நாயகிகயாக கிரித்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இதற்கிடையே, ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி வேளையில் திரைகாண உள்ளது. இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி .வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இது கார்த்தியின் இருபத்து ஐந்தாவது படமாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்