‘சந்திரமுகி 2 படத்தில் வசனங்களைப் பேசுவது சவாலாக இருந்ததாகச் சொல்கிறார் கங்கனா.
குறிப்பாக ‘லக லக’ என்பதை இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சொல்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டதாகவும் அப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழாவில் அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் நானே பின்னணி பேசி இருக்கிறேன். எனது கதாபாத்திரத்துக்காக நன்கு நடனம் ஆடி இருக்கிறேன். பேயாகவும் நடித்திருக்கிறேன்.
“பின்னணி பேசும்போது கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. ’லக லக லக’ என்று சொல்வதற்கு சிரமப்பட்டேன்.
“படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும். நகைச்சுவைகள், குட்டிக்கதைகள் என்று பலவற்றைச் சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார்,” என்றார் கங்கனா.

