இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்துள்ளனர்.
திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா, தன்னை சந்திரமுகியா நினைத்துக்கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்து காண்பித்தார். இந்த படத்தில் தான் உண்மையான சந்திரமுகி யார் என்று காண்பிக்கிறார்கள். கங்கனா ‘சந்திரமுகி’கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார் என்றார் லாரன்ஸ்.

