கனவில் கூட நினைக்கவில்லை: விநாயகன் நெகிழ்ச்சி

கனவில் கூட நினைக்கவில்லை: விநாயகன் நெகிழ்ச்சி

1 mins read
39a07d48-7fa5-4c19-8d38-2d679ac1ad5a
படம்: - ஊடகம்

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக காணொளியில் பேசியுள்ளார்.

“நான் ஒரு வனப்பகுதியில் 2 வாரங்கள் இருந்ததால் படத்தயாரிப்பு நிறுவனம் பல முறை தொலைபேசி மூலம் அணுக முயன்றும் பேச முடியவில்லை.”

“வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிந்தது, ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக இயக்குநர் நெல்சன் கூறினார்.

“இந்த வாய்ப்பைப் பற்றி கனவில் கூட நினைத்தது இல்லை. அதனால் கதையைக் கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்று விநாயகன் கூறினார்.

“வர்மன் கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு முக்கியக் காரணம் ரஜினிதான்,” என்றும் விநாயகன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்