தேசிய விருது பெறுவதற்கு முன்பு பல்வேறு அவமானங் களையும் கசப்பான அனுபவங் களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகச் சொல்கிறார் கிரித்தி சனோன்.
அண்மையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள அவர், திரையுலகில் அறிமுகமான புதிதில் தமக்கு மனிதர்களை எடைபோடத் தெரியவில்லை என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“திரையுலகில் வாய்ப்பு தேடுவது, மாடலிங் செய்வது என்று இளவயதில் நாள்கள் கடந்தன. அப்போது அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் ‘ஹை ஹீல்ஸ்’ காலணி அணிந்து நடக்க வேண்டும் என்றனர்.
“அவ்வாறு செய்தபோது எனது காலணி புல்லுக்குள் புதைந்து மிகவும் சிரமப்பட்டேன். உடனே நடன இயக்குநர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். அதை மறக்கவே இயலாது,” என்றார் கிரித்தி சனோன்.
அனைவரது முன்னிலையிலும் இவரை அந்த நடன இயக்குநர் மோசமாக ஏசினாராம். இதனால் அழுதுவிட்டதாகச் சொல்கிறார்.
எனினும் அவருக்காகப் பயந்து பின்வாங்கவில்லை என்றும் அந்த நடன இயக்குநருடன் பிறகு இணைந்து பணியாற்றவில்லை என்றும் கிரித்தி மேலும் தெரிவித்துள்ளார்.

