சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவரது 43ஆவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தப் புதுப்படத்தில் நஸ்ரியா ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிவடைந்த கையோடு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.
அதன் பிறகே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர்தான் நஸ்ரியா என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க உள்ளார்.


