விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிடத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் படத்தை விஷாலே தனது படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் சொந்தமாகத் தயாரித்துள்ளார். இதற்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் பெற்றிருந்தார்.
இந்தப் பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இதையடுத்து பணத்தை திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
இதை மீறி படத்தை வெளியிட விஷால் தரப்பு நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிடத் தடை விதித்தார். மேலும், செப்டம்பர் 12ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது.

