இந்தியத் திரையுலகின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் கங்கனா என்றும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா கவர்ச்சியாக தோற்றமளிப்பதாகவும் அதை வெகுவாக ரசித்ததாகவும் சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாகத்தில் ஜோதிகாதான் சந்திரமுகியாக நடித்திருந்தார். அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“நான் உங்கள் (கங்கனா) ரசிகை. இந்தத் திரைப்படத்தில் உங்களின் நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
“லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா.
அவரது வெளிப்படையான பாராட்டுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 15ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

