சூர்யாவுடன் இணையும் நஸ்ரியா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவரது 43ஆவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தப் புதுப்படத்தில் நஸ்ரியா ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிவடைந்த கையோடு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.
அதன் பிறகே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர்தான் நஸ்ரியா என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.
இந்நி்லையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க உள்ளார்.
சோபிதா: முன்னேற வேண்டும் என மனதில் வெறி ஏற்பட்டது
திரையுலகில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக நினைக்கவே முடியாது என்கிறார் நடிகை சோபிதா துலிபாலா.
தொடர்புடைய செய்திகள்
சாதிக்க வேண்டிய அம்சங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் என்றும் அதற்கு முடிவே இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.்
“என்னைப் பற்றிய வதந்திகளை கண்டுகொள்வதே இல்லை. சில வதந்திகள் தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்தேன். ஆனாலும்கூட மீண்டும் மீண்டும் அவற்றைப் பரப்புகிறார்கள்.
“சிறு வயதில் நான் படித்த பள்ளியின் விளையாட்டுப் பிரிவுக்கு தலைவனாக இருந்த மாணவன்மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவனிடம் சொல்ல முயன்றேன். ஆனால் முடியவில்லை.
“அந்த மாணவனும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் பள்ளியில் நான்தான் முதல் மாணவியாக இருந்தேன்,” என்கிறார் சோபிதா துலிபாலா.
அந்த மாணவனின் செய்கையால் வாழ்க்கையில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டதாகவும் இதற்காக அம்மாணவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
கொரில்லா உடன் நடித்த அஞ்சலி
சத்தமின்றி தமது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. படத்துக்கு ‘ஈகை’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். அசோக் வேலாயுதம் இயக்குகிறார்.
இதில் தாய்லாந்து கொரில்லாவுடன் நடித்துள்ளாராம் அஞ்சலி.
“இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்போதுதான் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
“பல முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கினோம். அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
“எப்படி கொரில்லாவுடன் பயமின்றி நடித்தேன் என்பதை நினைத்தால் எனக்கே வியப்பாக உள்ளது. எப்படியோ படம் சிறப்பான படைப்பாக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி,” என்கிறார் அஞ்சலி.

