சோகம் இருக்கலாம்; கண்ணீர் கூடாது

சோகம் இருக்கலாம்; கண்ணீர் கூடாது

1 mins read
6c68d7f4-e8cd-489d-81c3-f977313a0096
ராஷ்மிகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டாலும் மனமுடைந்து அழக்கூடாது என்கிறார் ராஷ்மிகா மந்தனா. இது தனது தாயார் கற்றுக்கொடுத்த முதல் பாடம் என்றும் கூறுகிறார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதல் வயப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு ஊடகங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது தாயார் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார் ராஷ்மிகா.

“நாம் எதற்காகவும் அழக்கூடாது என்பார் அம்மா. அழுவதன் மூலம் நாம் சக்தியற்று இருக்கிறோம் என்பது பிறர்க்குத் தெரியவரும். அதை அனுமதிக்கக் கூடாது.

“மனதில் சோகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது நாம் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழும். அது மனதில் தன்னம்பிக்கையையும் விதைக்கும் என்பார் அம்மா. இன்று வரை அதைப் பின்பற்ற முயற்சி செய்கிறேன்,” என்கிறார் ராஷ்மிகா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்