அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியுள்ள ‘தி ரோட்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் திரிஷா. இப்படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ‘சார்ப்பட்டா’ புகழ் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை அமைத்துள்ளாராம் அருண் வசீகரன். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
“என் மனதைத் தொட்ட கதைகளில் ‘தி ரோட்’ கதையும் ஒன்று. அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளேன்,” என்கிறார் திரிஷா.
மேலும், இவர் நடித்துள்ள ‘லியோ’ படமும் அக்டோபரில்தான் வெளியாகிறது. அதனால் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளாராம்.

