ரகுல்: உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை

1 mins read
892d7981-199c-4871-a3ca-baaa9c2bc3e6
ரகுல் பிரீத் சிங். - படம்: ஊடகம்

ஒரு நடிகையாக தாம் அடைந்துள்ள வளர்ச்சி மிகுந்த உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்.

மொழிகள் கடந்து தமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சினிமாவின் மூலம் அனைத்து மொழி மக்களுடனும் இணைந்திருப்பது சுகமாக இருக்கிறது. நான் தற்போது நடித்து வரும் படங்கள் பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியீடு காண உள்ளன.

“பல மொழிகளில் நீங்கள் நடிக்கும் படம் வெளியாகும்போது அந்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே கிடைக்காது. என்னுடைய மகிழ்ச்சி ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் படங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்,” என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் ஜோடியாக ரகுல் நடித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த ‘அயலான்’ படம் விரைவில் திரைகாண உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்