ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு

ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு

1 mins read
f2848392-2223-407d-ada2-fe5c1bcfae7b
நடிகர் நாசர். - படம்: ஊடகம்

நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்ட வங்கியில் இருந்து 40 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார்.

கட்டடம் கட்ட சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்றும் அதிக நிதி தேவைப்படுகிறது என்றும் சென்னையில் செய்தியாளர் களிடம் அவர் குறிப்பிட்டார்.

“முன்னணி நடிகர், நடிகையரிடம் நிதி கேட்கவும் முடிவு செய்துள்ளோம். அடுத்த ஓராண்டிற்குள் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். புதிய கட்டடத்தில் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்,” என்றார் நாசர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்