சுவரொட்டி மூலம் சம்யுக்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

சுவரொட்டி மூலம் சம்யுக்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

1 mins read
90bacd3b-9fbf-4306-8eb5-ff1c730fa0df
சம்யுக்தா. - படம்: ஊடகம்

தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையாவிட்டாலும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் சம்யுக்தா.

இந்நிலையில் அவர் நடித்து வரும் ‘டெவில் - பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சம்யுக்தாவின் பிறந்தநாளையொட்டி அப்படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டியை வெளியிட்டனர்.

இப்படத்தில் நைசதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் மிகவும் மாறுபட்ட வேடத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்ததாகவும் சொல்கிறார் சம்யுக்தா.

இந்த படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியாகிறது.

சம்யுக்தா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘வாத்தி’. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் புதுப்படத்தில் இவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இத்தகவலை அவரோ, படக்குழுவினரோ உறுதி செய்யவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்