ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சமூக ஊடகங்களிலும் ஆத்மிகா சற்று பிரபலமானவர். அடிக்கடி படங்கள் பதிவிடும் பழக்கமும் கொண்டவர்.
இறை நம்பிக்கை அதிகம் கொண்ட ஆத்மிகா தமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்.
இந்நிலையில் ஆத்மிகா சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.
ஆத்மிகாவின் இந்த செயலைப் பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி சமூக ஊடகங்களில் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.

