நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
அவர் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.
நாளைய தீர்ப்பு என்ற படத்தில் விஜய்யை அவர் அறிமுகம் செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தற்போது ‛கிழக்கு வாசல்’ என்ற சின்னத்திரைத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சந்திரசேகர்.
‛‛கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியாக இல்லை, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்,” என்று காணொளி மூலம் சந்திரசேகர் தகவல் வெளியிட்டார்.
இந்நிலையில் வெங்கட்பிரபு படத்தில் நடிக்க உள்ள விஜய், பட வேலைகள் தொடர்பாக அமெரிக்கா சென்று இருந்தார்.
செவ்வாய்க்கிழமை அவர் சென்னை திரும்பிய நிலையில் தனது தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பான போட்டோவை பகிர்ந்து ‛‛உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து’‘ என பதிவிட்டுள்ளார் சந்திரசேகர்.
விஜய்யின் அரசியல் ஈடுபாடு, அவரின் மக்கள் இயக்கம் தொடர்பாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்கும் இடையே பிளவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சூழலில் தந்தையை சந்தித்துள்ளார் விஜய்.
தற்போது விஜய் லியோ திரைப்படம் தொடர்பான வேலையில் மும்முரமாக உள்ளார்.

