வெளிநாடு செல்லும் கங்குவா படக்குழு

வெளிநாடு செல்லும் கங்குவா படக்குழு

1 mins read
35d3b3e6-a75a-4968-b2f9-8a3431087bf9
சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.  - படம்: ஊடகம்

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம்.

சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் பலவற்றை படமாக்க படக்குழு தாய்லாந்தை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போது பட வேலைகளும் படப்பிடிப்புப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதால், படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் சண்டைக் காட்சி ஒன்றை அண்மையில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதையுடன் உருவாகும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

வரலாற்றுப் பின்னணி, கம்பீரமான தோற்றம் ஆகிய அம்சங்கள் சூர்யாவை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், 11 மொழிகளில் கங்குவா படம் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்